Monday, October 04, 2010

என் தாய் மாமன்!

சின்ன வசுல இருந்தே நான் கேக்கறதெல்லாம் வாங்கி குடுத்தவரு!
எனக்கு துணி எடுத்து குடுக்கறதுல இருந்து தீணி வாங்கி குடுக்கறவரைக்கும் எல்லாமே பார்த்து பார்த்து பன்னுனவரு!
என்னோட இன்ஜினியரிங் கவுன்செலிங் முதல் காலேஜ் பாக்கற வரைக்கும் கூட வந்தவரு!

இன்னும் ஞாபகம் இருக்கு, நான் என்னோட பனிரண்டு வயசு வரை அவோரோட பேர சொன்னது இல்ல, எனக்கு அவர்மேல அவளவு பயம்...
அடிக்கிற கைதான் அணைக்கும்னு சொல்லறமாதிரி, என்ன அதிகம் அடித்தவரும் என்மேல் அதிக பாசம் கொண்டவரும் அவர்தான்..
என்னோட அப்பா என்ன அடிச்சது கிடையாது, ஆனா என் மாமா அடிச்சா மட்டும் ஒன்னும் கேட்க மாட்டாரு, ஏனா என் அப்பாவுக்கு தெரியும் என் மாமாவை தவிர வேறு யாராலும் என்னை அவ்வளவு செல்லம் குடுத்து வளத்திருக்க முடியாதுனு!
தொழில்ல எவ்வளவு பணம் போனப்ப கூட நான் இருக்குறேன் உனக்கு என்ன வேணும்னாலும் என்ன கேளுனு சொன்னவரு..!

இன்னிக்கு உயிரோட இல்லேங்கிரப்ப அத என்னால நம்ப முடியில..


நான் அவர கடைசியா பாத்தது எட்டு மாசத்துக்கு முன்னாடி, அப்போ கூட அவர்கிட்ட அதிகம் பேசுல.. கடைசியா என்ன பாத்துட்டு போனப்ப என்னானு சொல்லாம கண்ணுல கண்ணீரோட போனாரு!!!
இதெல்லாம் நடக்கும்னோ என்னவோ, நாம இதுதான் நம்ம அக்கா மகன கடைசியா பாக்கரதோனு நினச்சு அழுதாருனு தெரியில..


எனக்கு எல்லாம் பாத்து பாத்து பண்ணுன அவருக்கு நான் ஒண்ணுமே பன்னணுது இல்ல.. கடைசில அவரோட இறுதி சடங்குல கூட கலந்துக்க முடியாம போயிருச்சேனு நினச்சு அழுக மட்டும்தான் முடியிது... எந்த ஒரு பலனுமே எதிர்பார்க்காம எல்லாம் பண்ணுன அவருக்கு நான் ஒரு கடனாளி என் வாழ்க்கை முழுவதும்!