Monday, July 13, 2009

கேள்வி பதில் ...

சாம் பதிவ படிச்சவுடனே எழுதனும்னு தோனுச்சு... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கோ ...
இது ஒரு தொடர் பதிவு, மனித சங்கிலி மாதிரி பதிவக சங்கிலி !!!!! உங்களால் உங்களுடன் ஓர் நேர் கானல்,,,,,

சரி எனது நேர்கானலுக்கு செல்வோம்..

உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
எனது பெயர் வெயக்கும் சில தினங்களுக்கு முன் எங்கள் பக்கத்துக்கு ஊர் காரர் எங்கள் ஜில்லாவுக்கு எம்.ல்.ஏ வாக வெற்றி பெற்றபோது அவரது பெயர் எனக்கு சூடப்பட்டது ...
பிடிக்கும். ...

கடைசியாக அழுதது எப்போது..?
கொஞ்சம் ஈசியா கண்ணீர் வந்துடும்... ஒரு சில மாதங்களுக்கு முன்னால் தினமலர் இனைய தளத்தில் வயதான முதியவர் ஒருவரின் செய்தியை படித்த போது..

உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பிடித்தது நான் எழுதும் வரை... !!! அது ஒரு அழகிய நிலா காலம்!!

பிடித்த மதிய உணவு??
அம்மா வெய்ய்க்கும் சாம்பார், ரசம், அப்புறம் எங்க வீட்டு எரும தயிர் !!!

நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
கொஞ்சம் கஷ்டம் ... ஆனா பழகுனா சீக்கரம் விட மாட்டேன் .. விட்டுட்டா சேரவே மாட்டேன்..

கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவி, கடல் தண்ணி உப்பு கரிக்குமே.. !!

முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்??
முன்னாடி பாத்தா - கண்
பின்னாடி பாத்தா - தல முடி
கால பாத்தா - செருப்பு
தூரத்துல பாத்தா - உடை நிறம்

உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது - சந்தோசமா இருக்க ட்ரை பண்றது.. பிடிகாதது - கோபம் , அதிக பிரசிங்கி தனம் ... (என்னவோட அடுதவுங்களுக்கு அது சுத்தமா பிடிக்காது)

உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்?
கொஞ்ச வருஷம் வெயிட் பன்னுங்க ..

யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?
நீண்ட நாள் பழகிய நண்பர்கள் மத்தியில்!!!!

இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?
இதுக்கு முன்னாடி காக்கி, இப்போ நீலம்....

என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?..
எதுவும் கேட்குல சாமியோ !!!!

வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்

பிடித்த மணம்?
காட்டு முல்லை பூ... கடைசியாக மணந்தது - எங்க ஊர்ல சைக்கிள பள்ளிக்கூடம் போகும் போது ...

நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?
சதா, சுப்பூ, தங்கம் , பிரபா,அருண், ஞானம் ... சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள, அவர்களது மொக்கைய ரசிக்க....!!!!

பிடித்த விளையாட்டு? கிரிக்கெட் , ஆனா இப்போ விளையாடுவது டென்னிஸ்

கண்ணாடி அணிபவரா? இதுவரைக்கும் இல்லை, இனிமேல் சாத்தியமிருக்கிறது !!!

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்? தெரியில .... எதார்த்தமான படம்னு நினைக்குறேன்,,,, ஆனா எல்லா படமும் பார்பேன்.. !!

கடைசியாக பார்த்த படம்?
hangover விழுந்து விழுந்து சிரித்த படம்.. transformer பிரமாண்டம்!!

பிடித்த பருவ காலம் ?.
லீவ் அதிகமா இருக்கற காலம்...

இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?
ஷேர் பாயிண்ட் 2007...

உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?
இதுவரைக்கும் மாத்தவே இல்ல...(பொட்டி கம்பனிக்கு சொந்தமானது )

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
புல்லாங்குழல், அலாரம் எந்த சத்தத்துல இருந்தாலும்!!!

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு? வீடு பாத்தா, கண்ணுல மரயிற தூரம் வரைக்கும்!!!

உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?
சத்தியமா தெரியாது ,,,, எல்லாத்துலயும் சுமார் தான்!!!

உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?
பட்டினி...., அடுத்தவனை துன்புறுத்தும் விஷயம்..

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கொஞ்சம் கோவப்படுவேன்.... !!!

உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இன்ன்னும் கண்டுபிடிக்கல ,,,, இதுவரைக்கும் கேரளா !!!

எப்படி இருக்கணும்னு ஆசை ??
வேர என்னங்க !!! கடைசி வரைக்கும் சந்தோசமா அப்புறம் முடிஞ்ச வரைக்கும் கொஞ்ச பேர சந்தோஷ படுத்துறது!!!

மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ??..
கல்யாணத்துக்கு அப்புறம் நண்பர்களோட ஊர் சுத்தறது... (சுப்ஜெக்ட் டு சேன்ஜ்!!)

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
மேடு பள்ளம் ..இல்லாட்டி பள்ளம் மேடு !!!!