இளையராஜாவின் இசை நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக எனக்கு ஆறுதல் தரும் ஒரே விஷயம் இந்த நந்தலாலா. இந்த படத்தின் விமர்சனத்தை நான் படிக்கும் போது முள்ளும் மலரின் படத்தை நினைவுருதுவதாக கூறியிருந்தார்கள்.. அது மிகவும் சரி. ஜேசுதாசின் குரலில் ஒரு பாடல் மனதை தொட்டுவிட்டது. இந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லயோ ஆனால் இந்த படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை. இளையராஜாவின் மற்றுமொரு இசை "நான் கடவுள்". படம் வெளியான பிறகு மிகுந்த வெற்றி பெரும் என்று நம்புகிறேன்.
ஹரிஷ் ஜெயராஜாவின் அடுத்த படம் - "அயன்" அருமை !!! ஹரிஹரன் வித்தியாசமான முறையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். நீண்ட நேரம் கழித்துதான் என்னால் அதை உறுதி செய்ய முடிந்தது அதை ஹரிஹரன் தான் பாடியிருக்கிறார் என்று!!!!!
நான் ஒரு சிக்கலான வேலை செய்யும் இந்த தருணத்தில் அடுத்த சில நாட்களுக்கு இந்த இரு படங்களின் பாடல்கள் என்னை நிம்மதிப்படுத்தும் என்று நம்புகிறேன் !!!!!!
என்னோட நண்பர் ஒருவரின் விருப்பதிற்கேற்ப ட்ரை பண்ணி பாத்தேன் !!!! தமிழ் ஒழுங்கா வருதானு !!! பரவ இல்ல தமிழ டமிள்னு கொலை பன்னுலனு நினைக்கிறேன்!!!!!!
பருப்பு வடை செய்வது எப்படி !!!!! காத்திருங்கள்.. !!!!