Thursday, January 22, 2009

மசால் வடை !!!!



ரொம்ப ஈசியான பலகாரம்!! பருப்ப (பச்ச கடல பருப்பு) நல்லா ஊற வெச்சுகங்க, கலையில ஊற வெச்சா சாயிங்காலம் ரெடியாயிடும்!!!! வேற என்ன வெங்காயம், பச்சமிளகா, கொஞ்சம் இங்கி (Ginger) அப்புறம் தேவையான அளவு உப்பு போட்டு அரச்சுக்கோங்க!!!! ஓரளவுக்கு கெட்டியவே இருக்கட்டும் !!! அரகொறைய அரச்சாவே போதும். சட்டியில எண்ணைய ஊத்தி ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அரச்சுவெச்ச மாவ வட மாதிரி பண்ணி என்னயில போட்டா, ரெண்டு நிமிசிதுல வடை ரெடி!!!!!! முதல ஒரு வடைய போட்டு அப்புறம் உப்பு காரம் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணி பாத்திட்டு அப்புறம் மீதி மாவ வடையா போட வேண்டியது தான்.!!!!! சுவையான வடை ரெடி...  

பின் குறிப்பு!!!! கீரை, கொத்தமல்லி போட்டா இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கும்.....


இந்த ஊரு குளுருக்கு டி இல்லாட்டி காபி கூட சேத்து சாப்பிட்டா !!!! அட டா தேவாமிர்தம் !!!