Monday, September 15, 2008

ஞாபகம் வருதே ஞாபம் வருதே !!!!

நான் நீண்ட நாட்களாக தமிழில் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதற்கு இன்றுதான் நேரம் கிடைத்தது.
அமாங்க வேலை ஒன்னும் அதிகமா இல்ல அதனால ஒரே சோம்பேறியா ஆயிட்டேன். வேலை இருந்தப்பவாது கொஞ்சம் சுறுசுறுப்பா இருந்தேன். இப்போ சுத்தம் ... ஒரே இடத்துலேயே இந்த பொட்டிய வெச்சிகிட்டு சும்மா உட்காந்தறேன். சொல்லிக்கிற மாதிரி இந்த வாரம் ஒன்னும் பெருசா பண்ணுல நாலு படத்த பாத்தத தவிர. அமாங்க ஒரே வரதுல நாலு படம் அதுவும் திரை அரங்கில். அதிலும ஐ - பெருசுல (அதாங்க ஐ மாக்ஸ்) பாத்த கருப்பு இரவு ( டார்க் நைட்) பிரமாதம். வேற என்ன சரோஜா , ராக் ஆன் (ஹிந்தி படம்) அப்புறம் ரைடீஜீஅஸ் கில் ( நேர்மைக்க்காக கொலை) அப்டின்னு நினைக்குறேன்.
வேலை "என்ன கொடுமை சார் இது " ங்கர மாதிர தான் போகுது... பொறுத்திருந்து தான் பாக்கணும்.... புதுசா ஒரு பொட்டி வாங்கிருக்கிறேன் .... டெல்-1420
அத தான் இப்போ நோண்டிக்கிட்டு இருக்கிறேன்.. அத பத்தி நாளை பார்க்கலாம்..