எனக்கு ரொம்ப பிடிச்ச காபிங்க. ஆனா ரொம்ப பேருக்கு இதபத்தி தெரியவே இல்ல. எங்க வீட்ல உடம்பு செரியில்லனா இந்த காபி வெச்சு குடுப்பாங்க. நான் கடைசியா இந்த காபி எப்போ குடிச்சனு எனக்கு ஞாபகம் இல்ல ஆனா இந்த காபி எப்புடி வெய்கரதுனு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. இது ரொம்ப ஈசி. கொதமல்லிய நல்லா உடச்சு தண்ணில கொதிக்க வெயிக்கணும் அப்புறம் மண்ட வெல்லம் உடச்சு போட்டு கொஞ்சம் பால் மிக்ஸ் பன்னி கொதிக்க வெச்சா காபி ரெடி.. நீங்களும் முயற்ச்சி பன்னி பாருங்க. ..
கொதமல்லிய எப்புடி உடைக்கரதுனு என் நண்பர் ஒருவர் கேட்டதால் நான் கொத்தமல்லியின் புகைப்படத்தை இதில் சேர்த்து உள்ளேன். செய்முறையில் எதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் கேள்விகளை எனக்கு அனுப்புங்கள் ..